Friday, March 5, 2010

அப்போது உன்னைச் சுற்றினேன்...


அப்போது
உன்னைச் சுற்றினேன்
இப்போது
என்னைச் சுற்றுகின்றன
உன் ஞாபகங்கள்.

நீ கொடுத்த உன் ஞாபகம்....


நீ கொடுத்த உன் ஞாபகம்
உன்னைவிட உயரமாய்
வளர்ந்து நிற்கிறது....
நான் வளர்க்கும் ரோஜாச் செடி
என்னைவிட உயரமாய்
வளர்த்து நிற்பதைப்போல.

உன் வீட்டு ஜன்னல் வழியே....


உன் வீட்டு ஜன்னல் வழியே
நீ என்னை முதல்முதலாய்ப் பார்த்ததும்
அப்படியே போய் மைதானத்தில் அமர்த்து
"நீயா என்னைப் பார்த்தாய்" ஏன்கிற
நம்பவே முடியாத கேள்வியோடு
திரும்பத் திரும்ப உன் பார்வையை
விடியும்வரை நினைத்துப் பார்த்த நாளிலேயே
ஆரம்பமாகிவிட்டது
உன்னை நினைக்கும் இந்த பழக்கம்.

தனியாகத்தான் வாழ்கிறாயா.....


"தனியாகத்தான் வாழ்கிறாயா" என்று
மிகச் சாதாரணமாகக்
கேட்டுவிடுகிறார்கள்
உன் ஞாபகத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும்
என்னைப் பார்த்து.

ஒரு சின்ன சண்டையோ....


ஒரு சின்ன
சண்டையோ சச்சரவோ இன்றி
அழகாகப் போய்க் கொண்டிருக்கிறது
உன் ஞாபகத்தோடு
நான் நடத்தும் குடித்தனம்.

உன்னைப் பிரிந்தும்....


உன்னைப் பிரிந்தும்
நான் உயிரோடு இருக்கிறேன்
உன் ஞாபகத்தின் கருனையால்.

ஓயாமல் உன்னையே நினைக்கிறேன்....


ஓயாமல் உன்னையே நினைக்கிறேன்
என் ஓய்விலும்
உன்னையே நினைக்கிறேன்.

உன்னோடு வாழ முடிந்திருந்தால்.....


உன்னோடு வாழ முடிந்திருந்தால்
அது கொடுப்பினைதான்
ஆனால்
அதைவிடப் பெரிய கொடுப்பினையாய்
இருக்கிறது
உன் நினைவோடு வாழ்வது.

உன் ஞாபகமாய்....


உன் ஞாபகமாய்
என்னிடம் எதுவுமே இல்லை
உன் ஞாபகத்தைத் தவிர

நிலா இல்லாத வானத்தை....


நிலா இல்லாத வானத்தை
நட்சத்திரங்கள் அழகாக்குகின்றன
நீ இல்லாத வாழ்க்கையை
உன் ஞாபங்கள் அழகாக்குகின்றன.
PAKEE Creation