Thursday, February 18, 2016

கோபம்...

சாந்தமான மனிதனுக்கு கோபம் வரவேண்டுமானால்
காரணம் பலமாக இருக்க வேண்டும்
அழமான நீர்நிலை அலையாது
அது அலைய வேண்டுமானால்
அதில் பெரிய கல்லைத்தான் எடுத்துப் போட வேண்டும்...

குழந்தைகளின் கடமை...

பெரியவர்கள் சம்பாதிக்கும் பெரும் சொத்துக்களை
அழிப்பதுதான் அடுத்து வரும் குழந்தைகளின் கடமை...

அற்ப குணங்கள்...

நம்மைவிடச் சிறந்தவர்களைப் பற்றி பேசும்போது
நாம் நம்மிடமுள்ள அற்ப குணங்களை
உதறிவிடவாவது கற்றுக்கொள்ள வேண்டும்...

பெண்கள்...

புண்பட்ட பெண் உள்ளத்திற்கு ஆறுதலிளிக்க
ஆணின் அன்பைவிடச் சிறந்த மருந்து உலகத்தில் கிடையாது
ஆண் தங்களை அணுகுவதிலும் கொஞ்சுவதிலும்
பெண்கள் எவ்வளவோ திருப்தியடைகிறார்கள்...

வாழ்வு , சாவு...

வாழ்க்கைல பள்ளம் மேடு இருப்பது சகஜம்
மேட்டுல இருந்து பள்ளத்துக்கு போறவன் சாகனும்னு நினைக்கிறான்
பள்ளத்துல இருந்து மேட்டுக்கு போறவன் வாழனும் நினைக்கிறான்...

பணம்...

மனிதர்க்குக் கிடையாத மதிப்பு இங்கு
தினம் மாறும் பணத்துக்கு உரித்தாச்சு
தறிகெட்டு நெறிகெட்டு தர்மத்தின் விழிகேட்டு
துயர் இங்கு வாழ்வாச்சு

நோய் கண்ட மனிதர்மேல் மருத்துவப்
பணத்தீயால் ரணம் செய்து வதைக்கின்றனர்
கடவுள் பெயரை சொல்லி களியாட்டம் செய்கின்றனர்
கருத்து ஏதும் அறியமால்
மடம் கட்டி பொருள் சேர்த்து மாயங்கள் பல செய்வார்
மெய்யை பொய்யாக்கி

உதிரத்தில் உணர்வில்லை உறவுக்கும் விருப்பமில்லை
மரணத்தில் விடையாகும் - போகும்
மரணத்தில் விடையாகும்

கண்ணோடு வாயையும் செவியையும்
நம்பாதே
உன்னை நீயே உணர்த்துகொள் - மனிதா
விழித்து கொள்...

கண்கள்...

தனியாக உட்கார்ந்து நன்றாக அழ விரும்புகிறவனுக்கு
தனிமை நல்ல வசதி
அது உடம்பில் உள்ள நீரைக் கீழே இறக்கி விடுகிறது
துடைப்பார் இல்லாத கண்கள்
முற்றிலும் வற்றியே பிறகே கண்ணீரை நிறுத்துகின்றன...

பிரமன் படைப்பு ...

பெண்களைப் போல் எந்த விஷயத்தையும்
உள்ளடக்கியும் ரகசியமாகவும் வைத்துக்கொள்ள
ஆண்களால் முடியாது
ஆண் பிள்ளைகளைத்தான் பெண்களிடம் ஏமாறுவதற்கென்றே
பிரமன் படைத்திருக்கிறான்...

குடியின் சக்தி...

குடியின் சக்தி மிக விசித்திரமானது
சிரிப்பு , அழுகை , கோபம் , அங்க சேஷ்டைகள்
ஆகிய சகல விகாரங்களையும் மின்னல் வேகத்தில்
மாறி மாறி அளிக்ககூடிய மருந்து உலகத்தில்
ஏதாவது உண்டென்றால் அது குடிதான்...

மக்கள்...

மக்கள் நினைப்பதைக்கொண்டு
தனிப்பட்டவர்கள் நடத்தையை தீர்மானிக்க முடியாது
வயது வந்த பெண்ணும் ஆணும் ஒருவருக்கொருவர்
பார்த்துச் சிரித்துக் கொண்டால் கூட
உலகம் விபரீத அர்த்தத்தையே கற்பிக்கிறது...

காலம்...

காலம் மனிதர்களின் அந்தஸ்தை
எப்படி மாற்றி மாற்றித் தூக்கி எறிகிறது...

கடமை...

உலகத்தில் ஆள்பவர்களுக்குக் குறைவில்லை
கடமையை அறிந்து ஆள்பவர்கள்தான் குறைவு
பின்னால் வருபவர்களுக்குக் கடமையை உணர்த்துவது
முன்னாள் செல்பவர்களின் கடமை...

அற்பமான மனிதன்...

அற்பமான மனிதன்
ஆபத்தில் சிக்கிகொண்டால் தான் தப்பும் வழியைப் பார்ப்பானேயொழிய
தன் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய
விளைவுகளைப் பற்றி கவலைப்படவே மாட்டான்...

மகான், முட்டாள்...

வாழ்க்கைச் சமுத்திரத்தில் ஊசலாடும் நாம்
சதா உணர்ச்சி அலைகளால் தூக்கி எறியப்படுகிறோம்
காதலிக்கும் பருவத்தில் துறவறத்தையும்
துறக்க வேண்டிய வயதில் காமத்தையும் இச்சிப்பவர்கள்
பெரிய மகான்களாய் இருப்பார்கள் அல்லது
முட்டாள்களாயிருப்பர்கள்...

சமூகம்...

அறியாத உள்ளங்களில் ஆயிரம் ஆசைகள் எழலாம்
ஆனால் அவை கைகூடுவது
சமூகம் அவற்றை எவ்வளவு தூரம்
சகிக்கும் என்பதைப் பொறுத்திருக்கிறது...

கசப்பு...

கசப்பு ஏற்பட்ட மனத்தில்
எழும் எண்ணங்களும் கசந்தே இருக்கும்...

முட்டாள்தனம்...

ஒரு மனிதனின் முட்டாள்தனம்
இன்னொரு மனிதனுக்கு
எவ்வளவு தூரம் பயன்படுகிறது...

பணத்தின் வலிமை பெரிதுதான்...

சாம்ராஜ்யத்தைக் காக்கவும் பணம் தேவை
பெண்ணைக் காப்பாற்றவும் பணம் தேவை
பணத்தின் வலிமை பெரிதுதான்...

பெண்ணின் மனம்...

தன்னை காக்க ஓர் ஆண்மகன் இருக்கிறான்
என்ற துணிவு இருந்தால்
பெண்ணின் மனம் ஒரு தனி பலத்தைப் பெற்று விடுகிறது...
PAKEE Creation